தேர்தல் விதிமுறைகளை மீறிய வட்டாட்சியர்: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக குளச்சல் தொகுதி வட்டாட்சியர் மீது நவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி, அவர் மீதும், பறக்கும் படை அதிகாரிகள் மீதும் உரிய நவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வட்டாட்சியர் தேர்தல் விதிகளை மீறியது உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்படுவதாக கூறியதோடு, அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு, தேர்தல் விதிகளை மீறிய வட்டாட்சியர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 4 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு, இது தொடர்பாக புகார் ஒன்றை பதிவு செய்து, 12 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.