விபத்து காப்பீடு மோசடியை தடுக்க குழு அமைக்கும் உயர்நீதிமன்றம்

--

சென்னை

விபத்து  காப்பீடு பெறுவதில் மோசடியை தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் குழு ஒன்றை அமைக்க உள்ளது.

கடந்த 2017ஆம் வருடம் பிப்ரவரி மாதம் சென்னை பூந்தமல்லி அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் மோகன் என்பவர் மரணம் அடைந்தார்.   அந்த மரணத்துக்காக மூன்று முறை தனித்தனி காப்பிடு கோரப்பட்டு ரூ.1.25 கோடி அளிக்கப்பட்டுள்ளது.   இதனால் சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனமான சோழமண்டலம் பொது காப்பிட்டு நிறுவனம் இது குறித்து விசாரணை நடத்த நீதிமன்றத்திடம் கோரிக்க விடுத்தது.

அதை ஒட்டி நீதிபதி பிரகாஷ் இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு ஐபிஎஸ் அதிகாரியை நியமித்தார்.     அந்த விசாரணையில் ஐந்து காப்பீட்டு நிறுவனங்கலில் மட்டும் இது போல 353 போலி காப்பீடு கோரிக்கைகள் பற்றிய விவரம் கிடைத்துள்ளது.   மொத்தம் உள்ள 26 வாகன காப்பீடு நிறுவனங்களையும் ஆராய்ந்தால் இது போல மேலும் பல போலி கோரிக்கைகள் குறித்து தெரிய வரும் என தெரிவித்த நீதிபதி பிரகாஷ் இந்த மோசடிகளை தடுக்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.

அந்த் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் குழு ஒன்றை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளது.   அத்துடன் இது போன்ற போலி காப்பீட்டு தொகை கோரிக்கைகளுக்கு துணை போகும் வழக்கறிஞர்களையும் இடைத் தரகர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளது.   குறிப்பாக மோகன் மரண வழக்கில் மூன்று முறை இழப்பீடு தொகைக்காக  வாதிட்ட வழக்கறிஞர்கள் முருகன், ஜெயகுமார் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது.   மேலும் இதில் இடை தரகராக செயல்பட்ட ஸ்டிபன் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.