Random image

பணமின்றி திரும்பிய காசோலைக்காக வாட்ஸ்அப் மூலம் சம்மன் : வங்கி நடவடிக்கை

டில்லி

ணமின்றி திரும்பிய காசோலைக்காக வாடிக்கையாளர்களுக்கு ஈ மெயில் மூலமும் வாட்ஸ்அப் மூலமும் எச் டி எஃப் சி வங்கி சம்மன் அனுப்பி உள்ளது.

வங்கிக் கணக்கில் பணமில்லாமல் வங்கிக் காசோலை அளிக்கப்படுவது சட்டப்படி குற்றமாகும்.     அவ்வாறு காசோலை பணமில்லாமல் திரும்பி வரும் போது வங்கிகள் நடவடிக்கை எடுப்பது வழக்கமான ஒன்றாகும்.   இந்தியாவில் தற்போது அது போல 60 லட்சம் செக்குகள் திரும்பி வந்துள்ளன.  இவற்றுக்கான சம்மன்களை வங்கிகள் அனுப்பும் போது அதை சம்மந்தப்பட்டவர்கள் பெற்றுக் கொள்ளாத நிலை உள்ளது.

இதற்காக வங்கிகள் நவீன தொடர்பு முறைகளை பயன்படுத்த தொடங்கி உள்ள்னர்.   அதன்படி எச் டி எஃப் சி வங்கி காசோலைகள் பணமின்றி திரும்பி வந்தது குறித்து 250 சம்மன்களை வாட்ஸ்அப் மூலமும் ஈ மெயில் மூலமும் அனுப்பி உள்ளது.    ஏற்கனவே உச்சநீதிமன்றம் தனது உத்தரவுகளை வாட்ஸ் அப் அல்லது ஈ மெயில் மூலம் அனுப்பி வருவதை வங்கியும் பின்பற்றி உள்ளது.

இவ்வாறு மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஒரிசா, தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எச் டி எஃப் சி வங்கி சம்மன் அனுப்பி உள்ளது.     இதில் ஒரு சில சம்மன்கள் மட்டும் டில்லி, ராஜஸ்தான், சண்டிகர் மற்றும் காஷ்மீர் மாநிலங்கள்இல் அனுப்பப்பட்டுள்ளது.   இதில் பெரும்பாலான சம்மன்கள் ஈ மெயில் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய இரு முறைகளிலும் அனுப்பப்பட்டுள்ளன.