வந்தார்…. பேசினார்… சென்றார்… என் தாய்நாடு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது: டெல்லி வன்முறை மற்றும் டிரம்ப் வருகை குறித்து மம்தா கருத்து

மேற்கு வங்கம்:

மெரிக்க ஜனாதிபதி டிரம்பின் டெல்லி வருகை, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும், அதை எதிரானவர்களுக்கும் இடையே வன்முறை மோதல்களுடன் சேர்ந்தே நடந்ததுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இரண்டு நாள் பயணம் முடித்து விட்டு நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில், இதுகுறித்த பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பெங்காலி மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் மொழிகளில் எழுதப்பட்ட இந்த பதிவில், “அவர் வந்தார்… பேசினார்…. அவர் வெளியேறினார்…. என் தாய்நாடு எரிந்து கொண்டே இருந்தது. கலக்கம், கவலை, கலக்கம். இதயம் அழுது கொண்டே இருந்தது. இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. ”என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் என் தாய்நாடு என்பது பெரிய எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லி நடந்த வன்முறை, மோதல்களில் 22 பேர் கொல்லப்பட்டதோடு, பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 200 பேர் காயமடைந்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), குடியுரிமைக்கான தேசிய பதிவு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பிஆர்) ஆகியவற்றை அறிமுகப்படுத்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் முடிவு குறித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வடகிழக்கு டெல்லியில் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன. இது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியை இடமாற்றம் செய்யும் அளவுக்கு முற்றியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், இந்த வன்முறைக்கு எதிராக பேசியுள்ளார். இது பாரதிய ஜனதா அரசின் சதி என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் வருகைக்கு, ஒத்ததாக போராட்டங்கள் நடத்தப்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் ராஜாங்க அமைச்சர் பாபுல் சுப்ரியோ உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 28 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கிழக்கு மண்டல கவுன்சில் (EZC) சந்திப்புக்கு முன்னதாக, தற்போது ஒடிசாவில் உள்ள மம்தா, செவ்வாயன்று புவனேஷ்வருக்கு புறப்படுவதற்கு முன்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து பேசியிருந்தார்.

ஆழ்ந்த மன உளைச்சலுடனும், தற்போதைய நிலைமை குறித்து கவலைப்படுவதாகவும், அமைதிக்காக வேண்டுகோள் விடுத்ததாகவும் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) தலைவர் கூறினார்.

மேற்கு வங்கம், பீகார், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிடையே மேம்பாடு, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் கவனம் செலுத்துகிறது. டெல்லியின் தற்போதைய நிலைமையை அடுத்து, ஷாவுடன் மம்தா விவாதிப்பது குறித்து ஊகங்கள் பரவி வருகின்றன.

மம்தா ஆரம்பத்தில் இருந்தே CAA, NRC மற்றும் NPR ஆகியவற்றின் குரல் கொடுத்து வருகிறார். ஆனால் கலவரத்தின் போது, முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசுவதில் எச்சரிக்கையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.