எனக்கு எந்தவொரு ட்விட்டர் கணக்குமே கிடையாது; அதில் இணையவும் விரும்பவில்லை : வடிவேலு

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைக்கு பின் திரையுலகிலிருந்து விலகியிருந்தார் வடிவேலு .

இதற்கு முன்பாக ‘தெனாலிராமன்’ மற்றும் ‘எலி’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருந்த வடிவேலுவின் அனுமதியுடன் அதன் இயக்குனர் யுவராஜ் , ட்விட்டர் கணக்கைத் தொடங்கினார். அந்த இரண்டு படங்கள் தொடர்பான போஸ்டர்கள், ட்ரெய்லர்கள் தவிர வேறு எதுவும் பகிரப்படவில்லை .

தற்போது வடிவேலுவின் பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கு உலவி வருகிறது. பலரும் இது வடிவேலுதான் என்று அந்தக் கணக்கினை ஃபாலோ செய்து வருகிறார்கள்.

ஆனால் அது தன்னுடையது அல்ல என வடிவேலு தெரிவித்துள்ளார் .