ஓரினச்சேர்க்கையாளரில் உலக அழகன் இவர்தானாம்

 

2017ம் வருடத்துக்கான உலகின் தலைசிறந்த ஓரினச்சேர்க்கை அழகன் என்ற பட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் ராஸ்படோ என்ற இளைஞர் பெற்றுள்ளார்.

உலக அழகி, உலக அழகன் போட்டிகளைப்போலவே, திருநங்கைகளுக்கு அழகிப்போட்டி நடப்பதும் நமக்குத் தெரியும். அதே தற்போது, ஓரினச்சேர்க்கையாளருக்குள்ளும் “சிறந்த அழகன்” போட்டி நடத்தப்படுகிறது.

இந்த வருடத்தின் ஓரினச்சேர்க்கை அழகன் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே, மிஸ்டர் ஆன்லைன் வோட், சிறந்த நீச்சல் வீரர், மிஸ்டர் இன்டர்வியூ, மிஸ்டர் சோஷியல் மீடியா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

35 வயதாகும் ஜான், 6 அடி உயரமும், வசீகர உடல்கட்டும் கொண்டவர். ஏற்கெனவே இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று ஒரு பேச்சு இருந்தது. இவர் அமைதி காத்து வந்தார்.

இந்த நிலையில் இதை உறுதி  செய்யும் வகையில்,  ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ஓரினச்சேர்க்கையாளர் அழகன் போட்டியில் பங்கேற்றார். , பட்டத்தையும் வென்றுவிட்டார்.

இதுகுறித்து,  கருத்து தெரிவித்த அவர், “ஓரினச்சேர்க்கையாளர் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதில் தவறில்லை” என்று தெரிவித்துள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: He is -mr-gay-world-2017, ஓரினச்சேர்க்கையாளரில் உலக அழகன் இவர்தானாம்
-=-