பள்ளி மாணவிகளின் ஆடைகளை கழற்றி அணிவகுப்பு நடத்திய ஆசிரியர் பணி நீக்கம்

வாரணாசி :

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் ஆடைகளை கழற்றி அணிவகுப்பு நடத்தி அதை தன் மொபைலில் படம் பிடித்த பள்ளி தலைமை ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் சன்ப்தரா மாவட்டத்தில் உள்ளது பெண்கள் ஜூனியர் பள்ளி. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர், சரியாக படிக்கவில்லை என்று சொல்லி, அவர்களது ஆடைகளைக் களைய உத்தரவிட்டு, அணிவகுப்பாக நடக்கச் சொல்லியிருக்கிறார் தலைமை ஆசிரியர். அதை தனது மொபைல் போனிலும் படம் பிடித்திருக்கிறார்.
இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட நீதிபதி சந்திர பூஷனிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அவர் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம், அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்துள்ளது. அதோடு துறை ரீதியான விசாரணையும் நடத்த உத்தரவிட்டுள்ளது.