நெட்டிசன்:

“இன்றைய இசை, திருப்பதியில் போய் மொட்டை அடிச்சுட்டு  புருவத்தையும் சேர்த்து எடுத்த மாதிரி இருக்கிறது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.

தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று லைவ் ஆக பேசிய இளையராஜா தெரிவித்ததாவது:

“நான் இசையமைத்த நாற்பது வருட காலமும்… எல்லாம் நடந்துமுடிந்து… “முடிந்துவிட்டது” !!  🙁 இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர்களுடன் பாடி.. இசையமைத்து ஒலிப்பதிவு செய்வதென்பது.. இந்த உலகில்.. இந்தப்பேரண்டத்தில் நடக்கப்போவதில்லை ! அந்த காலகட்டம் முடிந்துபோய்விட்டது!

சிரிக்கவேண்டிய விஷயம் இல்லை இது ! Musicians இல்லன்னு அர்த்தம்! Music போட்றவங்க இல்ல.. Music வாசிக்கிறவங்க இல்ல.. பாடுறவங்க இல்ல.. சும்மா ஏதோ பண்ணிட்டு இருக்கோம்…

சினிமாவுல வந்து கையக் கால ஆட்டுறா மாதிரி… Fight பண்றவன் Fight’டா பண்றான்?.. அது மாதிரி இங்க பாடுறவனும் பாடப்போறதில்ல.  ஏன்னா Tune இல்ல. இந்த இசை எவ்வளவு உயர்ந்தது.. எத்தனை ராகங்கள்.. எத்தனை கலப்புகள்.. எவ்வளவு வாத்தியக்கருவிகள் ! வாசிக்கிற விதங்களில் எத்தனை எத்தனையான பாவங்கள் ! எத்தனை உணர்வுகள்! எத்தனை Emotions !

எல்லாம் போயிடுச்சு ! திருப்பதிக்குப் போயிட்டு மொட்டை அடிச்சுட்டு வந்தா மாதிரி இருக்குது.. இப்போ  புருவத்தையும் சேர்த்து எடுத்தமாதிரி இப்போது இசையுலகத்தில் Musicians கிடையாது என்று ஆயிடுச்சு !” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார் இளையராஜா.