இங்கிலாந்தில் இருந்து ஈரோடு வந்த 16- பேரை தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை:

ங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த 16- பேரை வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் 16 பேர்கள் வந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூர் வழியாக ஈரோடு மாவட்டம் வந்த அவர்கள் 16 பேருக்கும் கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. எனினும், அவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தனிமை படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.

16 பேரிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சுகாதார துறையின் மூலமாக புனேவில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது. 16 – பேருக்கும் சளி,காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றனர்.