சுகாதார நிபுணர்களுக்கு சந்தேகம் கிளப்பிய ரஷ்ய பலி எண்ணிக்கை!

மாஸ்கோ: கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை ரஷ்ய அரசு குறைத்து கூறலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர் சுகாதார நிபுணர்கள்.

தற்போதைய நிலையில், உலகளவில் அதிகம் கொரோனா பாதித்தோர் உள்ள நாடுகளில் ரஷ்யா மூன்றாம் இடத்தில் உள்ளது. ரஷ்யாவில், நேற்று மட்டும் 8,946 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 92 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.53 லட்சமாகவும், பலி எண்ணிக்கை 3,633 ஆகவும் அதிகரித்துள்ளது.

மொத்தம் 1.19 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையே, ரஷ்ய அரசு பலி எண்ணிக்கையை குறைத்து கூறுவதற்கு வாய்ப்பிருப்பதாக சுகாதார நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.