டெல்லி:  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைக்கைதி பேரறிவாளன் தற்போது பரோலில் அவரது வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரெ பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், கடநத 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு  நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், பேரறிவாளனின் தந்தையின் உடல்நிலை காரணமாக, அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையில், அவரது வழக்கு விசாரணையைத் தொடர்ந்து அவருக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்,   உடல்நலம் பாதிக்கப்பட்ட பேரறிவாளன்  கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.