தப்லிகி ஜமாத் பிரச்சினையை விடுங்கப்பா… பாஜகவினருக்கு அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவுரை…

டெல்லி:

ந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணமாக விளங்கிய தப்லிகி ஜமாத்தின் கூட்டம் தொடர்பான பிரச்சினை பழையதாகி விட்டது, அந்த பிரச்சினை தொடர்பான விவாதங்களை தவிருங்கள் என்று பாஜக நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷவர்தன் அறிவுரை கூறி உள்ளார்.

“தப்லிகி ஜமாத் பிரச்சினை மீண்டும் மீண்டும் எழுப்புவது தனக்கு வேதனையைத் தருகிறது…தப்லிகி ஜமாஅத் மீதான விவாதத்தை முடியுங்கள் என்று கட்சி சகாவான ஜி.வி.எல் நரசிம்மராவிடம் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா விவகாரத்தில் பாஜகவினர் தப்லிகி ஜமாத் கூட்டத்தை முன்னிலைப்படுத்தி வருகின்ற னர். இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழுந்து வருகிறது. இதனால், அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று மத்திய அமைச்சர் பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறி உள்ளார்.

சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி.யுமான ஜி.வி.எல். நரசிம்மராவ் பேசும்போது, இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணம்,   மார்ச் மாதம் டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாஅத் நிகழ்வு என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் சர்ச்சைக்குரிய வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஹர்ஷவர்தன்,  “இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால்,  இந்த பிரச்சினை பழையதாகி விட்டது, இந்த தலைப்பு விவாதிக்கப்பட்டு போதுமான பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் எழுப்ப எனக்கு வேதனையாக இருக்கிறது. ”

தப்லிகி ஜமாஅத் எபிசோட் ஒரு சோகமான நிகழ்வு என்றும், இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை. நிஜாமுதீன் மார்க்கஸ் எபிசோட் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அரசாங்கம் கோடிட்டுக் காட்டிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டிய ஒரு பாடமாக அமைந்தது.

“ஆனால், அவர்களில் பெரும்பாலோர் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதால் அந்த தலைப்பை மீண்டும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை”   பல தக்லிகி ஜமாத் உறுப்பினர்கள், தங்கள் சொந்த மாநிலங்களான ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற நாடுகளுக்கு சென்றனர். அங்கு  அவர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தலில் கழித்திருந்தனர் என்று கூறியவர், மீண்டும் மீண்டும் தப்லிகி ஜமாத் விவாதம் குறித்து பேசுவது தேவையற்றது.

இவ்வாறு அவர் பாஜகவினரக்கு அறிவுரை கூறி  உள்ளார்.

கார்ட்டூன் கேலரி