குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை: சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், அதில் இருந்து மீண்டவர்களுக்கு பக்க விளைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா மீண்டும் 99 சதவீதம் வாய்ப்ப்பில்லை என்று சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

108 ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்து கொள்ள விரைவில் புதிய செயலி தொடங்கப்படும். கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தயங்கிய போது அரசு மருத்துவர்கள்தான் சிகிச்சை அளித்தனர். கொரோனாவுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர் என்று கூறினார்.