11 குழந்தைகளின் இறப்பு – ராஜினாமா செய்த சுகாதார அமைச்சர்

மருத்துவமனையில் 11 குழந்தைகள் மரணமடைந்ததற்காக, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்த சம்பவம் ஏதோ நம் நாட்டில் நடந்தது என்று ஆச்சர்யப்பட்டுவிட வேண்டாம். வடஆஃப்ரிக்க பாலைவன நாடான டுனிசியாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பிறந்த 24 மணிநேரங்களுக்குள்ளாக 11 குழந்தைகள் இறந்துள்ளன. சுகாதார அமைச்சகமும் மற்றும் வழக்கறிஞர்களும் இதுதொடர்பான விசாரணையைத் துவக்கியுள்ளார்கள்.

இதற்கான காரணம் ரத்த தொற்றாகத்தான் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

கடந்த 2011ம் ஆண்டு நிகழ்ந்த அரபு வசந்த புரட்சியின் மூலமாக, எல்-அபிதின் பென் அலியின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர், நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டிருந்தாலும், நாடு பெரிய பொருளாதார நெருக்கடியில் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

– மதுரை மாயாண்டி

கார்ட்டூன் கேலரி