கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான ஆரோக்கியமுள்ள இளம் மக்கள் திரளின் காத்திருப்பு காலம் இன்னும் அதிகரிக்கலாம் என்று ஒரு சமூக வலைதள நிகழ்ச்சியில் பேசியுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) முதன்மை விஞ்ஞானி டாக்டர்.செளம்யா சுவாமிநாதன்.
“மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்குத்தான் தடுப்பு மருந்து பயன்பாட்டில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்பதை பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கிறார்கள், ஆனாலும், அவர்களில் யார் அதிக அபாயத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள்தான் வரையறுக்க வேண்டும். இதில் வயதானவர்கள் உள்ளிட்டோரும் அடக்கம்” என்றுள்ளார் அவர்.
“ஏராளமான வழிகாட்டுதல்கள் வந்து கொண்டுள்ளன. ஆனால், ஒரு சராசரியான நபர், ஒரு ஆரோக்கியமான இளம் நபர், தனக்கான கொரோனா தடுப்பு மருந்தைப் பெறுவதற்கு 2022ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியதிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்” எனவும் அவர் கூறினார்.
கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்தவுடன், எந்த மக்கள் தொகுதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் மற்றும் தடுப்பு மருந்து கடைசியாக எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது தொடர்பாக கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.