டில்லி:

முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த டில்லி உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு விசாரணை தொடங்கி உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆனால், உச்சநீதி மன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நிலையில், இன்று விசாரணை நடைபெறும் என அறிவித்தது. அதன்படி தற்போது விசாரணை தொடங்கி உள்ளது.

இதற்கிடையில், சிபிஐ சிதம்பரத்தை கைது செய்து, அவருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 22ந்தேதி சிபிஐ காவலில் வைக்க நேற்று உத்தரவிட்டு உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ப.சிதம்பத்தின் மனு மீது உச்சநீதி மன்றத்தில் பகல் 12 மணி அளவில் விசாரணை தொடங்கி உள்ளது.

இந்த வழக்கு ஜாமின் வழக்காக விசாரிக்கப்படுகிறதா அல்லது முன்ஜாமின் வழக்காக விசாரிக்கப்படுகிறதா என்ற விவரம் இந்த செய்தி பதிவிடும் வரை வெளியாகவில்லை…