காரசார விவாதம்: ராஜினாமா குறித்து முடிவு எடுக்க கர்நாடக சபாநாயகருக்கு உச்சநீதி மன்றம் தடை!

டில்லி:

ச்சநீதி மன்றத்தில், கர்நாடக அரசியல் நிலவரம், எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன. இதையடுத்து, எம்எல்ஏக்கள் ராஜினாமா மீது சபாநாயகர் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராக சில எம்எல்ஏக் கள் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்து,  போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், அங்கு மாநில அரசு கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதற்கிடையில், தங்களது ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் காலம் தாழ்த்து வதாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்றைய விசாரணையை தொடர்ந்து, சபாநாயகர், தனக்கு கால அவகாசம் தேவை என்று பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதி மன்ற அமர்வு விசாரித்து. அப்பபோது, காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது.

விசாரணையின்போது குறுக்கிட்ட தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய்,  கர்நாடக சபாநாயகர் உச்சநீதி மன்றத் உச்சநீதி மன்றம்  எந்த கேள்வியும் எழுப்ப கூடாது என நினைக்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தகுதி நீக்கத்தை தவிர்க்கவே எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர் என்று விளக்கம் அளித்தார். மேலும், அதிருப்தி எம்எல்ஏக்களின்  கோரிக்கையை ஏற்க கூடாது என கூறியவர்,  சபாநாயகர் முன் ஆஜராகி யாரும் ராஜினாமா அளிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, அவர்களின் ராஜினாமா கடிதம் மீது எப்படி  நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சபாநாயகருக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும், அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என கூறி, வழக்கின் விசாரணையை ஜூலை 16 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.