டிஎஸ்பி மகளை நேரில் பார்த்தவுடன் ‘சல்யூட்’ அடித்த கடமை தவறாத இன்ஸ்பெக்டர் அப்பா..!

திருப்பதி: ஆந்திராவில் காவல் ஆய்வாளர் ஒருவர், காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் தமது மகளுக்கு பெருமிதம் பொங்க சல்யூட் வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருப்பதியில், காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திருப்பதி கல்யாணி அணை பகுதி காவல்துறை பயிற்சி மையத்தில் காவல் ஆய்வாளரான ஷியாம் சுந்தர், காவல்துறை கண்காணிப்பாளரான மகள் ஜெஸ்ஸி பிரசாந்தியை சந்தித்த போது, பெருமிதம் பொங்க சல்யூட் வைத்தார்.

தனது மகளை டிஎஸ்பி பொறுப்பில் பார்த்ததும், கடமை மறக்காத ஷியாம் சுந்தர், உடனடியாக தனது கையை உயர்த்தி, உயரதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சல்யூட் அடித்தார். இதனை பார்த்த பலரும், மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் உணர்ந்தனர்.

தந்தையின் சல்யூட்டை ஏற்றுக் கொண்டு பதில் சல்யூட் வைத்தார் பிரசாந்தி. அதனை பார்த்து கூட்டத்தில் பங்கேற்க வந்த காவலர்களும்  மகிழ்ச்சி அடைந்தனர்.

You may have missed