மெக்சிகோ:

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 8.1 ஆக பதிவாகியுள்ளது. மேக்சிகோவின் தென் பகுதியான கடற்கரை பகுதியில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கடற்கரை மாநிலங்களுக்கு  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மெக்சிகோவின் கவுடமாலா, சால்வடர், கோஸ்டாரிகா,  நிகரகுவா, கொண்டுராஸ் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக பதறியடித்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அலடியடித்து தெருவுக்கு வந்தனர். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் பீதியுடன் தெருவுக்கு வந்து பதற்றத்துடன் காணப்பட்டனர்.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.  மெக்சிகோவின் சியாபஸ் மாநிலம் மற்றும் டபாஸ்கோவின் எபிசென்டர் மாநிலத்தில் பலர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மெக்சிகோ கவுடமாலா பகுதியில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அடுக்கு மாடி கட்டிங்கள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

நிலநடுக்கம் காரணமாக பல மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் உடனடியாக, கட்டி டத்தில் இருந்த  அகற்றப்பட்டு வீதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

கட்டிடங்கள் சேதம் காரணமாக  பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளதால், பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். மேலும், மாநில நிர்வாகமும்,  முன் எச்சரிக்கை காரணமாக மின்சாரத்தை  நிறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கம் குறித்து  மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பெனா நீட்டோ, தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக பள்ளி கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும், நாட்டின் பேரழிவு மீட்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இடிபாடுகளில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகம் கூறி உள்ளார்.

மெக்சிகோவில் இன்று ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளானோர் பலியாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மெக்சிகோவில் ஏற்கனகே கடந்த 1985ம் ஆண்டு மற்றும் 1995ம் ஆண்டு நிலநடுக்கம் ஏப்பட்டு ஆயிரக்கணக்கானோர் மரணத்தை தழுவியது குறிப்பிடத்தக்கது.