Random image

அசாமில் வெள்ளம் : 67000 மக்கள் அவதி 

கௌகாத்தி

சாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் மக்கள் அவதி அடையும் மக்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் தீவிர மீட்புப் பணிகள் அளித்து வருகின்றன

அசாமில் 5 மாவட்டங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.   நேற்று வரை இந்த வெள்ளத்தால் சுமார் 32 பேர் மரணம் அடைந்துள்ளனர்.    அசாம் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இந்த வெள்ளத்தால் சுமர் 63000 பேருக்கு மேல் துயருற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் பல மக்களை நிவாரணப் பணிகள் சென்றடையவில்லை எனவும் மொத்தம் 67000 க்குமேல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.   இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் மேலும் மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு கன மழை பெய்யும் என அறிவித்துள்ளது மக்களை மேலும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

லகிம்பூர் மாவட்டத்தில் சுமார் 32000 பேருக்கு மேல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதற்கு அடுத்தபடியாக சரைடோ மாவட்டத்தில் 29000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த மாவட்டங்களில் 74 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 902 ஹெக்டேர் விளைநிலங்களில் பயிர்கள் பாழாகி உள்ளன.

அரசு பல இடங்களில் வெள்ள நிவாரண முகாம்களை திறந்துள்ளது.  மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தேசாங் நதி மற்றும் தான்சிரி நதி ஓர மக்களூக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.    அணைகளில் நீர் நிரம்பி வழிவதால் நீர் திறக்கப்பட்டுள்ளது.   கிராம சாலைகள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு நீரில் மூழ்கி உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி உள்ளார்.  அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் மாநில அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்ப்படுவதாகவும் மேலும் மத்திய அரசு தேவையான உதவிகளை மாநில அர்சுக்கு வழங்கி வருவதாகவும் அறிவித்துள்ளார்.