கடும் பனிப்பொழிவு: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது

ஸ்ரீநகர்:

ம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில்  கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைபாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக பகலிலேயே வாகனங்கள் விளக்கை ஒளிரவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டும், நேரம் மாற்றப்பட்டும் இயக்கப்பட்டு வருகிறது. பல ரயில்களின் சேவைகளும் மாற்றப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.   ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்றும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு உள்ளது.  இதனால் அந்த வழியே சென்ற வாகனங்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளன.  சில வாகனங்கள் வேறு வழியில் செல்கின்றன.  பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், பணிக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பாதிப்படைந்து உள்ளனர்.