குலுமணாலி நிலச்சரிவு: கார்த்தி உள்பட ‘தேவ்’ பட குழுவினர் சிலர் சென்னை திரும்பினர்

மனாலி: 

மாச்சலில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கும்,  நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அங்கு படப்பிடிப்புக்காக சென்றிருந்த ‘தேவ்’ படக்குழுவினர் மழை வெள்ளத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில்,  ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினர்.

நடிகர் கார்த்தி நடித்து வரும் தேவ் படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் குலாமணாலி பகுதியில் முகாமிட்டிருந்தனர். அங்கு தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக படத்தின் சூட்டிங்கை கேன்சல் செய்த படப்பிடிப்பு குழுவினர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

நிலச்சரிவு காரணமாக சாலைகள் முடங்கியதால்,  காரணமாக படக்குழுவினர் வெவ்வேறு இடங்கில் சிக்கி தவித்து வந்தனர். இதுகுறித்து நேற்று டிவிட்டரில் தெரிவித்திருந்த நடிகர் கார்த்தி, குலுமணாலி பகுதியில் ஏற்பட்டுள்ள   நில சரிவின்போது பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன். அப்போது பல பொருட்கள் அடித்து செல்லப்பட்டன.  ஷூட்டிங்கிற்காக காரில் சென்றுக் கொண்டிருந்த நானும்  4-5 மணி நேரம் நான் காரியிலேயே இருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. பிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியிருந்ததாகவும், படக்குழுவினர் 140 பேரை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,நடிகர் கார்த்தி உள்பட சிலர்  நேற்று இரவு நாங்கள் சென்னை திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில்,  நான் உள்பட சிலர் சென்னை திரும்பி இருப்பதாகவும், ஆனால், . இயக்குனர், கேமராமேன் மற்றும் படக் குழுவினர் இன்னமும் மணாலியில் பாதுகாப்பாக உள்ளனர். அங்கு மின்சாரம் இல்லை,. நிலச்சரிவு காரணமாக முடக்கப்பட்ட சாலைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.  அவர்கள் ஓரிரு நாளில்  கீழே வருவார்கள்.  அங்க விரைவில் மழை நிற்கும்… என்று தெரிவித்துள்ளார்.

இந்த இயற்கை பேரிடரினால் ‘தேவ்’ படத்தை தயாரித்து வந்த லக்ஷ்மணனின் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘தேவ்’ படத்தில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், வம்சி, நவரச நாயகன் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி