குலுமனாலியில் கடும் நிலச்சரிவு: கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ பட குழுவினர் சிக்கித்தவிப்பு

மனாலி: 

மாச்சலில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கும்,  நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு படப்பிடிப்பில் ஈடுபட்ட தேவ் படக்குழுவினர் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். ‘தேவ்’ படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘தேவ்’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் குலுமனாலியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ‘தேவ்’ படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, குலுமனாலியில் அருவி, சாரல் மழை, மலை பின்னணியில் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருந்தது. அதற்காக கடந்த 4 நாட்களாக குலுமனாலியில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக கனமழை வந்துவிட்டது.

இதுகுறித்து நடிகர் கார்த்தி கூறுகையில்,  தேவ் படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் திடீரென்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நில சரிவு ஏற்பட்டு. கார் , பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன்.

வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்க் கும் போது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது ஷூட்டிங்கிற்காக காரில் சென்றுக் கொண்டி ருந்தபோது, நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதனால்,  இதனால் ரோட்டில் சென்ற கார்களும் நகரவே இல்லை. 4-5 மணி நேரம் நான் காரியிலேயே இருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. பிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியிருக்கிறேன்.

ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேரை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் எங்கே தங்கு வார்கள், சாப்பிடுவார்கள் எப்படி கீழே இறங்குவார்கள் என்று வருத்தமாக உள்ளது.  அவர்களை தொடர்புக் கொள்ள முடியவில்லை என கார்த்தி தெரிவித்துள்ளார்.

23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமை யான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப் படும் என்றும். அது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது என்று கூறியுள்ளார்.

இந்த இயற்கை பேரிடரினால் ‘தேவ்’ படத்தை தயாரித்து வந்த லக்ஷ்மணனின் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘தேவ்’ படத்தில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், வம்சி, நவரச நாயகன் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி