கவுஹாத்தி: கனமழை, வெள்ளப்பெருக்கால் அசாம், பீகார் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் சில நாட்கள் பெய்து வரும் கனமழையால் 24 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 82 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பு நீரில் மூழ்கி உள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் 13 லட்சம் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 44 பேரும், நிலச்சரிவில் சிக்கி 26 பேரும் பலியாகி உள்ளனனர். 16 மாவட்டங்களில் 224 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு பீகாரும் கனமழைக்கு தப்பவில்லை. வெள்ளப்பெருக்கு காரணமாக, முசாபர்பூர், தர்பங்கா என பல மாவட்டங்கள் நீரில் தத்தளிக்கின்றன.
பாகமதி ஆற்றில் தடுப்பு சுவர் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புக, மீட்பு குழுவினர் விரைந்து சென்று மணல் மூட்டைகளை வைத்து உடைப்பை அடைத்தனர்.