கனமழை – நிலச்சரிவு: கேரளாவில் நேற்று ஒரே நாளில் 24 பேர் பலி

திருவனந்தபுரம் :

கேரளாவில் கொட்டி வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நேற்று மட்டும் 24 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் நிலச்சரி வும்  ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று  மலப்புரத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உள்பட 14 பரிதாபமாக உயிரிழந்தனர். அதுபோல கோழிக்கோடு, கொல்லம், பத்தினம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா மாவட்டங்களில்  சேர்த்து மொத்தம் 24 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவில், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 67 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும்  1.5 லட்சம் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவில் மீட்பு பணிக்காக மத்திய அரசு கூடுதலாக ராணுவ வீரர்கள்,  தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள், படகுகளையும் கூடுதலாக அனுப்பி வைக்க வேண்டும்  என முதல்வர் பினராயி விஜயன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி