மும்பை: மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி  இதுவரை 28 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. கனமழை, வெள்ளத்தால் 2,300 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. 21 ஆயிரத்திற்குக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மழை, வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 28 பேர் பலியாகியுள்ளனர். சோலாப்பூரில் 14 பேரும், சாங்லியில் 9 பேரும், புனேவில் 4 பேரும் பலியாகி உள்ளனர். சதாராவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புனே, சோலாப்பூர், சதாரா,சாங்லி மாவட்டங்களில் 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. 6 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளைச் சேர்ந்த 22 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.