பீகாரில் கனமழை: 23 பேர் பலி

பாட்னா,

நாட்டில் அநேக பகுதிகளில் வெயில் அதிகரித்துள்ள நிலையில் பீகாரில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 23 பேர் பலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

 

நாட்டின் பல மாநிலங்களில் 40 டிகிரிக்கும் அதிகமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரத்துடன் அனல்காற்றும் வீசி வரும் நிலையில்,  தெலுங்கானா மாநிலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தென் மாநிலங்களில் சீதோஷ்ணநிலை இப்படி இருக்கும்போது   பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.

மழையின்போது ஏற்பட்ட சாலை விபத்துக்கள், மின்னல் மற்றும் இடி தாக்கிய விபத்துக்களில் இது வரை 23 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.