கனமழை எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை:

மிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக  நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக  பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கனமழை காரணமாக, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் கல்லூரிகள், 4 வளாகங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் கூறி உள்ளார்.

ஏற்கனவே தொடர் மழை  காரணமாக சென்னை பல்கலைகழகத்தின் கீழான கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.