கன மழை: தீயணைப்புத் துறை, சென்னை மாநகராட்சி அவசர உதவி எண் அறிவிப்பு

சென்னை:

மிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால்  சென்னை உள்பட பல இடங்கள் தண்ணீரால் சூழப்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை  முடங்கி உள்ளது. இதையடுத்து, தீயணைப்புத் துறை, சென்னை மாநகராட்சி அவசர உதவி எண்களை அறிவித்து உள்ளது.

அதன்படி, தீயணைப்பு துறை சார்பில், 101 என்ற எண்ணுக்கும், சென்னை மாநகராட்சி தரப்பில், 044-25384520, 044-25384530, 044-25384540 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்  எ என அறிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  வெள்ளத்தை சமாளிக்க போதுமான மீட்பு ரப்பர் படகுகள், உபகரணங்கள் மற்றும் மாவட்டம் தோறும் 21 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பேரிடைகாலங்களில் ஏற்படும் இன்னல்களை போக்க தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தயாா் நிலை படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும், போதுமான மீட்பு ரப்பா் படகுகள்,மிதவை உபகரணங்கள்,நூலேணிகள், நீட்டிப்பு ஏணிகள்,மீட்டலுக்கான மிக நீளக்கயிறுகள் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்கள், ஊா்திகளுடன் கூடுதலானமீட்பு பணி வீரா்கள் ஆயத்த நிலையல் உள்ளனா்.

ஓவ்வொரு மாவட்டத்திலும் 21 கமாண்டோ தீயணைப்பு வீரா்கள் கொண்ட குழு போதிய மீட்பு உபகரணங்களுடன் வெள்ள மீட்புக்கென பிரத்யேகமாக உருவாக்கி விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளனா். மேலும் தமிழ் நாட்டிலுள்ள 331 தீயணப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட 24 மணி நேரமும் படை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். எனவே, வெள்ளத்தினால் ஏற்படும் எந்த ஒரு பாதிப்பிற்கும் பொதுமக்கள் 101 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், அண்ணாசாலை, கிண்டி, ராமாபுரம், வடபழனி, பாடி, வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை மாநகரம் முழுவதும் பெய்த மழையால் சாலைகள் எங்கும் வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர் மழையின் காரணமாக இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மழை பாதிப்பு குறித்து 044-25384520, 044-25384530, 044-25384540 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

You may have missed