சென்னை,

டந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு மழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நேற்று பிற்பகல் முதல் இன்று அதிகாலை வரை பெய்த கனமழை மற்றும் தொடர்மழை காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் புகுந்த வெள்ள நீர் புகுந்தது.

தொடர் மழை காரணமாக  சாந்தோம் நெடுஞ்சாலை, வியாசர்பாடி, தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை, ஜி.பி.ரோடு, ராஜீவ் காந்தி சாலை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென்தமிழகம் மற்றும் வட கடலோர பகுதிகளில், மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக, திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் வெள்ள நீர் புகுந்தது. அதேபோல் துணைமுதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள   சென்னை எத்திராஜ் கல்லூரி விடுதிக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. அங்கு சிக்கி தவித்த மாணவிகள் மீட்கப்பட்டு பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.