மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை! பீதியை கிளப்பும் வானிலை மையம்

சென்னை,

டகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் தொடர் மழை பெய்து  வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் தற்போது குறைந்த காற்றழுத்த மண்டலம்,  தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருவது காரண மாக  தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், வடகடலோர மாவட்டங்களிலும் இதன் தாக்கும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள செய்தியில்,

“அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்” ‘. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் மிக பலத்த மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மேலும் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

‘மேலும் மழை எந்த அளவு பெற்றும் என்றும் தனது இணையதளத்தில் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

அதில், இன்று (வெள்ளிக்கிழமை)  தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். புதுச்சேரி மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களின் உள் பகுதிகளில் சில இடங்களிலும் மழை பெய்யும்.

நாளை (சனிக்கிழமை)  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.

நாளை மறுதினம்  (ஞாயிற்றுக்கிழமை)- தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

6-11-17 (திங்கட்கிழமை)- தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். உள் மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும்.

மழை எச்சரிக்கை குறிப்பையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டள்ளது.

அதில், “நவம்பர் 3-ந்தேதி (இன்று) தென் தமிழ்நாடு முழுவதும் பலத்த, மிக பலத்த மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். நாளை (4-ந்தேதி)யும் தமிழ்நாட்டின், தென் மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை- (5-11-17) ராயல சீமா மற்றும் ஆந்திராவின் தென் கடலோரப் பகுதிகளில் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 5 மற்றும் 6-ந்தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மேலும் 3 நாட்களுக்கு கடுமையான இயற்கை பேரிடரை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி