சென்னையில் கனமழை :  உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மாநகராட்சியை அழைக்க வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குமரிக்கடல் மற்றும் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலத்தால் தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது.   இதனால் பல இடங்களில் மக்கள் துயருக்கு உள்ளாகி இருக்கின்றனர்.   ஒரு லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

காற்றழுத்த மண்டலம் மேலும் வலுவடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை அளித்துள்ளது.    சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளிலும் மேலும் இரு தினங்களுக்கு மழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மழை காரணமாகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  மழைக் கால இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கக் கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-25384520, 044-25384530, 044- 25384540 என்ற தொலைப்பேசி எண்கள் மூலம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.