டில்லியில் கனமழை….பஸ் மூழ்கியது
டில்லி:
டில்லியில் இன்று கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதித்துள்ளது.
சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கனமழையால் மிண்டோ பாலத்தின் அடியில் தேங்கிய மழைநீரில் சிக்கிய பேருந்து மூழ்கியுள்ளது. இதில் வந்த பயணிகள் பஸ்சில் இருந்து வெளியே குதித்து தப்பினர்.
படம் உதவி: ஏஎன்ஐ