டெல்லியில் கனமழை – சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

டெல்லியில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சேவை ஸ்தம்பித்துள்ளது. சாலையில் பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

delhiu

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதல் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் யமுனா பஜார் அருகே உள்ள ரிங் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று மழைநீரில் சிக்கிக் கொண்டது. பேருந்தை இயக்க முடியாத பட்சத்தில் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

delhi

ஆங்காங்கே ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலைகளில் வாகனங்கள் ஸ்தம்பித்தன. டெல்லி போக்குவரத்து போலீசார் எந்தெந்த பகுதிகளில் நீர் சூழந்துள்ளது என்பதை அறிந்து அப்பகுதிகளில் போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர். டிவிட்டரில் போக்குவரத்து நிறைந்த பகுதிகளை குறிப்பிட்டு மக்களுக்கு எச்சரித்து போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

delhi

மேலும் பொதுமக்கள் யாரும் மழைநீர் சூழ்ந்த சாலைகளில் பயணம் செய்ய வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.