கேரளாவில் கன மழை :45 பேர் மரணம்

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 45 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கேரளா மற்றும் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.   மாநிலம் எங்கும் மழை பெய்து வரும் நிலையில் கோழிக்கோடு, வயநாடு,  கண்ணனூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில்  கனமழை பெய்கிறது.   இதனால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடும் மழையால் வீடுகள் இடிந்துள்ளன.  மின்சார கம்பங்கள் சாய்ந்துள்ளன.   வீட்டு இடிபாடு, மற்றும் வெள்ளத்தில் சிக்கியும் மின்சாரம் தாக்கியும் இதுவரை 45 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலரை கண்டு பிடிக்க முடியவில்லை.   மாநிலம் முழுவதும்  தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி உள்ளார்.   மக்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக அளிக்கவும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் ஆணை இட்டுள்ளார்.