உத்திர பிரதேச கனமழையால் 16 பேர் மரணம்

க்னோ

டந்த 24 மணிநேரத்தில் உ.பி. மாநிலத்தில் பெய்த கனமழையால் 16 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.   இந்த கனமழையால் ஷாஜகான்பூர், அமேதி, ரேபரேலி உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.   .   இதனால் பல இடங்களில் மழையால் விபத்துக்கள் ஏற்பட்டுளன.

மழையால் நேற்று ஒரு நாள்  மட்டும் 16 பேர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.   இதில் அவுரையா, அமேதி மாவட்டங்களில் தலா இரு நபர்கள் மழைக்கு பலியாகி உள்ளனர்.  அதிகபட்சமாக ஷாஜகான்பூர் மாவட்டத்தில் 6 பேரும் சிட்டப்பூர் மாவட்டத்தில் மூவரும் மரணம் அடைந்துள்ளனர்.

இது தவிர லக்கிம்புரி கிரி, உன்னாவ், ரேபரேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.    சுமார் 16 பேர் மழை விபத்தால் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  உ.பி. மாநில அரசு மரணமடைந்தோர் குடும்பத்துக்கு தலா ரு. 4 லட்சம் நிவாரண நிதியை அறிவித்துள்ளது.