சென்னை:
குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை முதல் வடதமிழகம் வரை நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், ஆந்திர கடலோர பகுதிகள், கேரளா மற்றும் லட்சத்தீவு கடற்கரை பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையொட்டி அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், செங்கல்பட்டு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. சென்னையிலும் லேசான முதல் மிதான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.