சென்னைக்கு விரைவில் கன மழை : தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு

சென்னை

சென்னை மற்றும் டெல்டா பகுதிகளுக்கு வரு நவம்பர் 20-22 வரை கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.

கஜா புயல் அடித்து ஓய்ந்துள்ள நிலையில் சென்னை நகருக்கு மழை மிகவும் குறைவாகவே பெய்துள்ளது. அதே நேரத்தில் டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன்,

“வரும் 20-22 தேதிகளுக்கான மழை அறிக்கை
தற்போது உருவாகி உள்ள தாழ்வழுத்த மண்டலத்தினால் டெல்டா மாவட்டங்களில் இருந்து சென்னை வரை நல்ல மழை பெய்யும். கடந்த கஜா புயலின் போது மழை பெய்யாத இடங்களில் இம்மழை பெய்து நிலையை சீராக்கும்.

கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கன மழையை அளித்தது    இவ்வாறு மழை பெய்யாத டெல்டா பகுதிகளில் வரும் 19 முதல் 20 வரை கனமான மழை பெய்யும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான காந்திபுரம் திருவள்ளூர் ஆகிய இட்ங்களில் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும்.

இந்த தாழ்வழுத்த மண்டலம் மிகவும் மழையைக் கொண்டு வரும் என்பதால் கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் வேலூர், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புல்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும்.

இந்த தாழ்வழுத்த மண்டலம் புயலாக மாறாது ஆனால் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் ”

என அறிவித்துள்ளார்.