சென்னை,

சென்னை அடையாறு பகுதியில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது வேலுமணி தெரிவித்ததாவது:

அப்போது, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டுள்ளதாகவும் 15 மண்டலங்களாக பிரித்து கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

தூர்வாறும் பணிகள் 95 சதவீதம் முடிவந்துவிட்டன. 2015ஆம் ஆண்டு பெய்த மழை வேறு; தற்போது பெய்துவரும் மழை வேறு.

ஆகவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை. வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 4500 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன.

படகுகள், சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. அமெரிக்கா, லண்டன், பெங்களூருவில் தேங்கும் அளவுக்குக்கூட சென்னையில் நீர் தேங்கவில்லை. அங்கெல்லாம் எடுப்பதைவிட இங்கே சிறப்பான நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

தாம்பரம் முடிச்சூர், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நாள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியிருப்பதாக செய்தியாளர் கேள்வி கேட்டதை அடுத்து தொடர்ச்சியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தொடர் கேள்விகள் கேட்ட செய்தியாளரின் பெயரை அமைச்சர் கேட்டதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.