கனமழை: நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நெல்லை:

னத்த மழை பெய்து வருவதன் காரணமாக  நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள்.

இந்திய பெருங்கடல் பகுதியில்  மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாகி மாறி வருவதாகவும், இதன் காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட கேரள கடற்கரையோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

மேலும், வட தமிழகத்தில் 15 மற்றும் 16ம் தேதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் என்றும்  கூறியிருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக  நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்ட சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தூத்துக்குடி ரெயில்வே ஸ்டேஷனில  தண்டவாளத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் தூத்துக்குடி சென்ற முத்துநகர் ரயில், ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள மேலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி