கனமழை: 7ஆண்டுகளில் இடிந்து விழுந்த செம்மொழி பூங்கா சுவர்!

சென்னை,

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் சேதமடைந்தன.

இந்த செம்மொழி பூங்கா கடந்த திமுக ஆட்சியின்போது, 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 24-11-2010 அன்று திறக்கப்பட்டது.

கட்டப்பட்டு சுமார்  7 வருடங்களே ஆகி உள்ள நிலையில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தற்போது அந்தமான் அருகே உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழை காரணமாக கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்கா சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதனால், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் சேதம் அடைந்தன. இதன் காரணமாக சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

7 ஆண்டுகளில் அந்த பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.