நெல்லை:

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நெல்லை மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல அணைகள் நிரம்பி உள்ள நிலையில், தற்போது பாபநாசம் அணையும் முழு கொள்ளவை எட்டி உள்ளது.

வடகிழக்கு பருவமழையால், இந்த ஆண்டு தமிழகத்திற்கு நல்லமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னை, வேலூர் போன்ற ஒருசில மாவட்டங் களைத் தவிர தமிழக கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இடையில் சில நாட்கள் மழை பெய்யாத நிலையில், தற்போது சில நாட்களாக மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் நேற்று முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தல் நேற்று முன்தினம் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் நல்ல மழை பெய்த நிலையில், நேற்று இரவு கனமழை பெய்தது.

இதன் காரணமாக, அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், நெல்லையின் பிரசித்தி பெற்ற அணையான   பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக உள்ளது.

இதையடுத்து அதிகாலை 4 மணி முதல் அணையில் இருந்து 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது..

அதுபோல புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் தாலுக்காக்களில் நல்ல மழை பெய்துள்ளது.  இந்த பகுதிகளில் சராசரியாக 45.33 மி.மீட்ர்மழை பதிவாகி உள்ளது.

புதுக்கோட்டை தாலுக்காவில் உள்ள ஆதன்கோட்டை 48 மிமி மழையும், பெருங்லூர் பகுதியில் 48.80 மிமி மழையும், ஆலங்குடி பகுதியில் 30.20 மழையும், கந்தர்வக்கோட்டை பகுதியில் 35.மிமி மழையும் பதிவாகி உள்ளது.

அறந்தாங்கியில் 64.மட.ம மழையும், இலூப்பூர் அன்னவாசல் பகுதியில் அதிகபட்சமாக 70 மிமீ மழையும் பதிவாகி உள்ளது.