தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்கள் மழை பெய்யும்….வானிலை மையம்
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கன மழைக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், ஒரு வாரத்துக்கு மேலாக தென் மேற்கு பருவ மழை குறைந்து வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் வெப்ப சலன மழை சில பகுதிகளில் மட்டும் பெய்துள்ளது.
தொடர்ந்து மேற்கு திசை காற்று மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இதனால் வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியில் இருந்து ஈரப்பதம் மிக்க மேகக் கூட்டங்கள் நகருகிறது. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும்.
கர்நாடகா முதல் தமிழகம் வரை பரவியுள்ள மேலடுக்கு சுழற்சியால் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்னு மையம் தெரிவித்துள்ளது.