தமிழகத்தின் வட & உள்ளார்ந்த மாவட்டங்களில் இன்று கனமழை?

--

சென்னை: தமிழகத்தின் வடக்கு மற்றும் உள்ளார்ந்த மாவட்டங்களில் இன்று கனமழைப் பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையஉதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இந்தாண்டின் இந்தப் பருவத்தில் ஓரளவு மழைப்பெய்து வருவதாக, பொதுவான வகையில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், இந்தாண்டில் விரும்பத்தக்க வகையில் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மாநில தலைநகரான சென்னையில், மேகமூட்டம் காணப்படுவதுடன், இடியுடன் கூடிய மழையும் பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தின் பிற வடக்கு மற்றும் உள்ளார்ந்த மாவட்டங்களில் கனமழைப் பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.