டில்லி:

உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கடும் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘காஷ்மீர், இமாச்சல பிரதேச மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாயப்பு உள்ளது. மேலும், உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களின் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும்.

அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மசோரம், திரிபுராவில் நாளை பலத்த மழை பெய்ய அதிகளவில் வாய்ப்புள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, உத்தரபிரதேசம் மேற்கு பகுதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளி காற்று வீசும். ராஜஸ்தானின் சில இடங்களில் புழுதிப்புயல், மழைக்கு வாய்ப்புள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 13 மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.