கனமழை: தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

தூத்துக்குடி,

னமழையை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்திலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாம்பன்  துறைமுகத்திலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது தூத்துக்குடியிலும் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும்,  சென்னை அருகே உள்ள  எண்ணுர் மற்றும் நாகை துறைமுகத்திலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் சில நாள்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்திலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இக்கூண்டு திடீர் காற்றுடன் மழைபொழியக்கூடிய வானிலை என்பதைக் குறிக்கிறது.

தூத்துக்குடி பகுதியில் 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, நாகை, கடலூர், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் புயல் உருவாகும் நிலையில் உள்ள வானிலைப் பகுதியைக் குறிக்கும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கன்னியாகுமரி, நாகை மீனவர்களுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கார்ட்டூன் கேலரி