னமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  மற்ற இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள் பலருக்கு தங்களது மாவட்டம் எது என்பது தெரியாது என்பதே உண்மை.

காரணம் இந்த பகுதிகளின் முகவரி சென்னை என்றே இருக்கும். சென்னை மாநகராட்சிக்குள் இருந்தாலும் சில பகுதிகள் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவை.

ஆகவே எந்தெந்த பகுதிகளில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை.. எந்தெந்த பகுதிகளில் பள்ளிக்கு மட்டும் விடுமுறை என்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்படும்.

தவிர ஒட்டுமொத்த சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் கனமழை பெய்திருக்கும் நிலையில் இம்மூன்று மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து விடுமுறையை என்று அறிவித்திருக்கலாம்.

இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறும் என பதிவாளர் அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இதுவும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு சிறிய விசயத்தலேயே ஒருங்கிணைந்து செயல்பட முடியாத அரசு நிர்வாகம், பெருமழை வெள்ளம் என்றால் எப்படி ஒருங்கிணைந்து செயல்படும் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.