தமிழகத்தில் சேலம் உள்பட 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

சென்னை:

மிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று சேலம் உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னையிலும் மழை கொட்டியது.  நேற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.