​இலங்கை கனமழை: நிலச்சரிவில் சிக்கி 150 பேர் பலி?

--

இலங்கையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக  பத்துக்கும்  மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேலானவர்கள் பலியாகியிருக்கக்கூடும் என்று  அஞ்சப்படுகிறது.

இலங்கையில் புத்தளம், கொழும்பு, சில்லா  போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக  தொடர்ந்து  கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இது வரை  பத்துக்கும்  மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

0,,18029362_303,00

சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில் தண்டவாளங்களுக்கு மேல்  வெள்ளம் சூழ்ந்திருப்பதால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே அரநாயகே என்ற இடத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.  . இதில் சிக்கிய 350க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஆனாலும்,  150 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரும், ராணுவத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.