இமாச்சல்:   வெள்ளப்பெருக்கில் 62 தமிழர்கள் சிக்கித் தவிப்பு

மாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக் காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.  அங்கு சுற்றுலா சென்ற 62 தமிழர்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடும் மழை பெய்துவருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

குறுப்பாக அம்மாநில சுற்றுலாத் தளங்களான குலு, மணாலி, ஆகியவை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காங்ரா, குலு, சம்பா, மண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. ராவி, பியாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

. குலு மாவட்டத்தின் டோபி என்ற பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 21 பேர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம்  மீட்கப்பட்டனர் குலு, காங்ரா, சம்பா ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு சம்பவங்களில் சிறுமி உள்ளிட்ட ஐந்து பேர் மரணமைடந்தனர்.  பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவால் நூற்றுக்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளன.

மாநில அரசு, மீட்பு பணிகளை விரைவாக செய்துவந்தாலும்  சேதம் அதிக அளவில் உள்ளதால் மத்திய அரசு உதவ வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

இதற்கிடையே அம்மாநிலத்துக்கு தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா மேற்கொண்ட 62 பேர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். இவர்களில்  21 பேர் ஓசூரையும் 41 பேர் திருச்சியையும் சேர்ந்தவர்கள்.

இவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.